top of page
UDS

“UDS” என்றால் என்ன?

UDS என்பது ஓர் அபார்ட்மெண்ட் complex  இல் ஒவ்வொரு flat உரிமையாளரும் வைத்திருக்கும் நிலத்தின் ஒரு பகுதியே.

“UDS” இன் முக்கியத்துவம்.

ஒரு அபார்ட்மெண்ட் இன் விலையில் இரு பகுதிகள்  உள்ளது.

1. கட்டப்பட்ட பகுதியின் விலை.

2. உரிமையாளர் வைத்திருக்கும் UDS நிலத்தின் விலை.

காலம் செல்ல செல்ல கட்டிட மதிப்பு குறையும் ஆனால் அதன் நில மதிப்பு உயரும். எனவே ஒருவர் வைத்திருக்கும் UDS நிலத்தின் விலையை பொறுத்தே அந்த Flat இன் விலை பிற்காலத்தில் மதிப்பிடப்படும். ஒரு பழைய அபார்ட்மெண்ட் ஐ இடித்து புதிதாக கட்டும்  போது, UDS  அளவை வைத்தே அவரவரது புதிய வீட்டின் அளவு நிர்ணயம் செய்யப்படும்.

“UDS” எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

UDS  என்பது மொத்த நில பரப்பை, மொத்த Flats Area வால் வகுத்து, உங்கள் Flat  area வை பெருக்கி வருவது. உதாரணத்திற்கு,

ஒரு அபார்ட்மெண்ட் complex இல், 1000 சதுர அடி (Built up area ) உள்ள 10 Flats  இருப்பதாக வைத்துக்கொள்வோம். மொத்த Flats களின் பரப்பளவு = 1000 x 10 = 10000 சதுர அடி. அந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சின் நில பரப்பளவு 5000 சதுர அடி என்று வைத்து கொண்டால், ஒரு Flat இன் UDS = (5000/10000) x 1000 = 500 சதுர அடி.

ஒரு அபார்ட்மெண்ட் வாங்குபவர் எவ்வாறு ஏமாற வாய்ப்புள்ளது ?

அபார்ட்மெண்டை விற்பதில் கடும் போட்டி நிலவி வரும் இக்காலத்தில், Flat ஐ வாங்குவதற்கு ஒருவர் பில்டரிடம் கேட்பது எவ்வளவு சதுர அடி விலை மற்றும் Flat இன்  பரப்பளவு ( Built up  area ). ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

பில்டர் 1 . Flat area = 1000 sqft . ரேட் = 5000/sqft  மொத்த விலை = 50 லட்சம். UDS = 500 sqft

பில்டர்  2. Flat area = 1000 sqft . ரேட் = 4800/sqft  மொத்த விலை = 48 லட்சம். UDS = 460 sqft  

இப்போது Flat  வாங்குபவர் 48 லட்சம் சொல்லும் பில்டர் 2 விடம் தான் Flat வாங்குவார். ஆனால் அவரிடம் வாங்கும் Flat இன்  UDS 460sqft  தான் உள்ளது என்பதை கவனிக்க மாட்டார். ஏனென்றால் அதை யாரும் கேட்டாலொழிய  கூற மாட்டார்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். எப்படி UDS அளவு பில்டர் 2 விடம் குறைகிறது? என்று.

 

நீங்கள் பில்டர் 2 விடம் வாங்கும் Flat இன்  area 1000 sqft என்று அவர் சொன்னாலும் உண்மையான  Flat area 980sqft  தான் இருக்கும். பொதுவாக யாரும் அதை அளக்க (கவனிக்க ) மாட்டார்கள். இப்போது  பில்டர் 2 விடம் நீங்கள் இழப்பது  = 20 x  4800 = 96,000. மற்றும் UDS, 40 x  8000( நிலத்தின் விலை) = 320000. இதில் பில்டர் 1 கூடுதலாக வாங்கும் 2 லட்சம் விலையை கழித்தாலும் மீதம்  2 லட்சம் நஷ்டம் ஏற்படும். இதை நீங்கள் கவனிக்காமல் விட்டால் நீங்கள் ஏமாற்ற படுவீர்கள்.

bottom of page